இணையம் மூலம் ஆயுதங்களை விற்ற கும்பல் கைது

இணையம் மூலம் ஆயுதங்களை விற்ற கும்பல் கைது

1 mins read
83356aae-e038-4803-a1e7-c9804519ae45
கோப்புப் படம்: - பிக்சாபே

லக்னோ: இணையம் மூலம் ஆயுதங்களை விற்பனை செய்த கும்பல் கைது செய்யப்பட்டது.

உத்தரப் பிரதேசத்தில் இந்த கும்பலைச் சேர்ந்த ஏழு பேர் சமூக ஊடகங்கள் வழி துப்பாக்கிகளை விற்பனை செய்தனர். அங்குள்ள முசாபர் நகர் பகுதியில் இந்தக் கும்பல் பதுங்கி இருப்பது குறித்து காவல்துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், அங்கு கண்காணிப்பு தீவிரமடைந்தது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று காவல்துறையினர், ஏழு பேர் தங்கியிருந்த இடத்தில் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அவர்கள் கைது செய்யப்பட்டு நான்கு துப்பாக்கிளும் ஏராளமான தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதான ஏழு பேரில் இருவர் ஆயுதங்களை வாங்க வந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

விசாரணையில், சமூக ஊடகங்கள் மூலம் இந்தக் கும்பல் ஆயுத விற்பனையில் ஈடுபட்டது உறுதியானது.

ஆயுத விற்பனைக்கான தொகையை வங்கிக்கணக்குகள் மூலம் அல்லது நேரில் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக உத்தரப் பிரதேச மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்