தண்டவாளத்தில் எரிவாயு தோம்பு; சரக்கு ரயில் தப்பியது

தண்டவாளத்தில் எரிவாயு தோம்பு; சரக்கு ரயில் தப்பியது

1 mins read
6d7e7967-0563-4475-9e04-55620fe48a19
தண்டவாளத்தில் கிடந்த எரிவாயு தோம்பு யார் போட்டது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் தண்டவாளத்தில் கிடந்த காலியான எரிவாயு தோம்பை கண்டு, சரக்கு ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தில் ஞாயிற்றுக் கிழமை (செப் 22) ப்ரேம்பூர் நிலைய தண்டவாளத்தில் காலியான எரிவாயு தோம்பு ஒன்று கிடந்தது.

கான்பூரில் இருந்து பிரயாக்ராஜ் வரை செல்லும் சரக்கு ரயில் அப்பகுதியில் வந்தது. ஓட்டுநர் உடனே செயல்பட்டு ரயிலை நிறுத்தினார்.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதிகாரிகள் தோம்பை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.

எரிவாயு தோம்பு காலியாக இருந்தது. ரயிலை கவிழ்க்க சதி திட்டம் நடந்துள்ளது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்