மிசோரமில் ரூ.189.79 கோடியில் இஞ்சி சாகுபடித் திட்டம்

மிசோரமில் ரூ.189.79 கோடியில் இஞ்சி சாகுபடித் திட்டம்

1 mins read
891ba060-50a6-4626-b122-32fcc5bb0377
மிசோரம் இஞ்சி சாகுபடியை ஊக்குவிப்பதன் மூலம் அங்குள்ள விவசாயிகளின் வருவாய் ஆறு மடங்கு அதிகரிக்கும் என்று மத்​திய அமைச்​சர் ஜோதி​ரா​தித்ய சிந்​தியா தெரிவித்தார். - கோப்புப் படம்: ஸ்க்ரால்.இன்

அய்சால்: மிசோரம் மாநிலத்​தில் வேளாண் துறையை ஊக்குவிக்கும் விதமாக, ரூ.189.79 கோடி மதிப்​பிலான ‘மிசோரம் இஞ்சி இயக்​கம்’ எனும் புதிய திட்​டத்தை மத்​திய அரசு தொடங்​கி​யுள்​ளது.

இதன் மூலம் இஞ்சி சாகுபடி, அதன் மதிப்​புக் கூட்​டப்​பட்ட தயாரிப்​பு​களை மேம்​படுத்த முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்​திய வடகிழக்கு வட்டார மேம்​பாட்​டுத் துறை அமைச்​சர் ஜோதி​ரா​தித்ய சிந்​தியா, மிசோரம் முதல்​வர் லால்​டுஹோமா ஆகியோர் காணொளி மூலம் இத்​திட்​டத்தைத் தொடங்கி வைத்தனர்.

மிசோரம் இஞ்சி சாகுபடியை ஊக்குவிப்பதன் மூலம் அங்குள்ள விவசாயிகளின் வருவாய் ஆறு மடங்கு அதிகரிக்கும் என்று மத்​திய அமைச்​சர் ஜோதி​ரா​தித்ய சிந்​தியா தெரிவித்தார்.

மிசோரம் மாநிலத்தில் விளைவிக்கப்படும் இஞ்​சி​யில் 6 முதல் 8 விழுக்காடு வரை ‘ஒலியோ ரெசின்’ என்ற சத்து இருப்பதால் அவற்றுக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

இது உலக சராசரி​யான 3 விழுக்காட்டைவிட அதிகம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“அனைத்துலகச் சந்​தை​யில் ஒரு கிலோ இஞ்சி ரூ.500க்கு மேல் விற்​பனை​யாகும் நிலை​யில், இந்திய விவசா​யிகள் கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.15 வரை மட்​டுமே வரு​மானம் பெறுகின்​றனர்.

“எனவே, இடைத்​தரகர்​களை அகற்​றி, விவ​சா​யிகளுக்கு நேரடிப் பலன் கிடைக்​கச் செய்​வதே மிசோரம் இஞ்சி இயக்​கத்​தின் நோக்கம். இதன் மூலம் விவ​சா​யிகளின் வரு​வாய் 6 மடங்கு அதிகரிக்கும்,” என்றார் அமைச்​சர் ஜோதி​ரா​தித்ய சிந்​தியா.

குறிப்புச் சொற்கள்