அனைத்துலக கருப்பொருளைக் கொண்டுள்ள கேளிக்கைப் பூங்கா

1 mins read
8e8ca1f7-73a7-49f4-b456-23ef346a0cb4
கேளிக்கைப் பூங்கா. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

மும்பை: முதன்முதலாக அனைத்துலக அளவில் கேளிக்கைப் பூங்காவையும் சொகுசுக் கப்பல் சேவையையும் அறிமுகம் செய்து இந்தியா, தனது சுற்றுப்பயணத்துறையை உருமாற்றவுள்ளது.

நவி மும்பையில் டிஸ்னி உலகத்தைப் போன்ற கேளிக்கைப் பூங்கா ஒன்றை மகாராஷ்டிர அரசாங்கம் இந்திய மதியுரையகமான நிதி ஆயோக்குடன் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

200 ஹெக்டர்ஸ் பரப்பளவில் அமைக்கப்படும். கேளிக்கை இடங்கள், நீர்ப்பூங்கா, உல்லாச விடுதிகள், உயிரோவிய அரங்குகள் உள்ளிட்டவற்றை இந்தக் கேளிக்கைப் பூங்காவில் இருக்கும்.

கிட்டத்தட்ட ஏழு பில்லியன் டாலர் செலவில் கட்டப்படவுள்ள இந்தப் பூங்கா, கட்டுமானம், சுற்றுலாத்துறை, கேளிக்கைத் துறை உள்ளிட்டவற்றில் ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்கும்.

இதனால் ஐந்தாண்டுகள் கழித்து, மும்பையின் சுற்றுப்புற வருவாய் நான்கு மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகப் பெருகிவரும் சொகுசுக்கப்பல் துறையை ஆதரிக்கும் விதமாக புதிய சேவைகளின் அறிமுகம் அமையவுள்ளது.

சூரத்திலிருந்து புறப்படும் சொகுசு கப்பல் சேவை, வாரத்திற்கு ஒரு முறை வழங்கப்படும்.

முறையாக திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டால் இந்நடவடிக்கைகள், இந்தியாவிலுள்ள கேளிக்கை, சுற்றுலாத் துறைகளை மாற்றும். உள்ளூர் வர்த்தகங்கள் இதனால் பயனுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்