தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லஞ்சம் மூலம் ரூ.150 கோடி சொத்து வாங்கிய அரசாங்க அதிகாரி

1 mins read
68591a10-3fed-46e8-92bd-c74c78b43798
மின் இணைப்பு வழங்கச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அம்பேத்கருக்கு கோடிக்கணக்கான ரூபாயை லஞ்சமாகக் கொடுத்து மின் இணைப்பு பெற்றனர். - படம்: இந்திய ஊடகம்

ஹைதராபாத்: இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் அம்பேத்கர்.

அவர் மின்சார வாரியத்தில் பொறியாளராக வேலை செய்து வந்தார். அவர் அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு வழங்கக் காலதாமதப்படுத்தி வந்தார்.

இதனால் மின் இணைப்பு வழங்கச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அம்பேத்கருக்கு கோடிக்கணக்கான ரூபாயை லஞ்சமாகக் கொடுத்து மின் இணைப்பு பெற்றனர்.

அம்பேத்கர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

இதையடுத்து புகாரின் பேரில் அம்பேத்கரின் வீடு, அலுவலகங்கள், உறவினர்கள் உள்ளிட்டவர்களின் வீடுகளில் காவல்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16) சோதனை நடத்தினர்.

ஒரே நேரத்தில் அம்பேத்கருக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது சங்கரெட்டி மாவட்டம் பிரங்குடா மல்லிகாராஜன நகரில் உள்ள அம்பேத்கரின் உறவினர் சதீஷ் என்பவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கட்டுக்கட்டான பணம் சிக்கியது.

அதன்பின்னர் அம்பேத்கரின் வங்கிக் கணக்கு, அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சரிபார்க்கப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.150 கோடியென விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அம்பேத்கரை கைது செய்தனர்.

குறிப்புச் சொற்கள்