2.5 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் அரசு அதிகாரி கைது

2.5 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் அரசு அதிகாரி கைது

1 mins read
91d66fab-0aa0-4091-81fa-9058ce72d41c
2019ஆம் ஆண்டு குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் வென்ற மத்​தியப்பிரதேச தாசில்​தா​ரான அமிதா சிங் தோமரை காவல்துறையினர் மார்ச் 26 ஆம் தேதி கைது செய்​தனர்.  - படம்: இந்து தமிழ் திசை

போபால்: குரோர்​பதி நிகழ்ச்​சி​யில் ரூ.50 லட்​சம் வென்ற மத்​தி​யப்பிரதேச மாநில அரசு அதி​காரியான அமிதா சிங் தோமர் ரூ. 2.5 கோடி நிதி முறை​கேடு வழக்​கில் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

குவாலியரைச் சேர்ந்​த அமிதா சிங் தோமர், நடிகர் அமி​தாப்​பச்​சன் நடத்​திய கோன் பனேகா குரோர்​பதி நிகழ்ச்​சி​யில் 2019ஆம் ஆண்டு ரூ.50 லட்​சம் பரிசு வென்​று, இந்தியா முழு​வதும் பிரபல​மா​னார்.

மத்​தியப்பிரதேச மாநில அரசில் தாசில்​தா​ராக பணி​யாற்றி வரும் இவரைக் காவல்துறையினர் மார்ச் 26ஆம் தேதி கைது செய்​தனர்.

2021ஆம் ஆண்டு மத்​தியப்பிரதேச மாநிலத்​துக்கு அரசு வழங்கிய வெள்ள நிவாரண நிதியை பரோடா பகு​தி​யில் விநி​யோகம் செய்​த​தில் முறை​கேடு நடந்​த​தாக புகார் எழுந்​துள்​ளது.

2.5 கோடி ரூபாய் பணம் போலி​யான வங்​கிக் கணக்​கு​களுக்கு அனுப்​பப்​பட்டு முறை​கேடு செய்​யப்​பட்​டுள்​ளது கண்​டறியப்​பட்​டுள்​ளது.

இதையடுத்து பரோடா காவல்துறை அதிகாரிகள் அமிதா சிங் தோமரை அவரது வீட்​டில் கைது செய்​தனர்.

அவர் தற்போது நீதி​மன்​றக் காவலில் வைக்​கப்​பட்​டுள்​ளார்.

கைது செய்​யப்​பட்​டுள்​ளதைத் தொடர்ந்​து, அமிதா சிங் தாசில்​தார் பணியி​லிருந்து விடுவிக்​கப்​பட்​டுள்​ளார் என்று மாவட்ட ஆட்​சி​யர் அர்​பித்​ வர்​மா ஊடகங்களிடம் தெரி​வித்​துள்​ளார்​.

குறிப்புச் சொற்கள்