தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நயினார் வீட்டில் எடப்பாடிக்குத் தடபுடல் விருந்து

2 mins read
d7d10e85-2c63-43a9-aa69-895c95728f1f
விருந்துக்கு அமைக்கப்பட்டுள்ள கூடாரம் எனக் குறிப்பிட்டு இப்படத்தைத் தமிழக ஊடகம் வெளியிட்டுள்ளது. - படம்: தமிழக ஊடகம்

நெல்லை: ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற புரட்சிப் பயணத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஏற்பாடு செய்துள்ள விருந்தில் இன்று (ஆகஸ்ட் 3) பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இரவு விருந்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க.வின் முன்னாள் மாநிலத் தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, நிர்வாகிகள் சுதாகர் ரெட்டி, ஏ.பி.முருகானந்தம், மாவட்ட தலைவர்கள் முத்துபலவேசம், தமிழ்செல்வன், சித்ராங்கதன், விஸ்வை ஆனந்தன் உள்பட தென்மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

இதேபோல் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், எம்.ஆர். விஜயபாஸ்கர், சண்முகநாதன், இசக்கி சுப்பையா, ராஜலெட்சுமி, நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த விருந்துக்காக நயினார் நாகேந்திரன் வீட்டில் சுமார் 10,000 சதுரடியில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. கண்களை கவரும் வகையில் பல வண்ண விளக்குகள், இருக்கைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

‘வெஜ் சூப்’, முருங்கைக்காய் சூப் உள்ளிட்ட 4 வகை சூப், சாலட், குழிப்பனியாரம் உள்பட 9 வகை ஸ்டாட்டர்ஸ், 3 வகை பர்பிக்யூ, 5 வகை சாட் உணவுகள், திருநெல்வேலி அல்வா, காசி அல்வா, பலாப்பழ மைசூர்பாக், பால் கொழுக்கட்டை உள்ளிட்ட 11 இனிப்பு வகைகள், 3 வகை போளி, வேக வைத்த 8 வகை உணவுகள், 4 ரொட்டி வகைகள், 8 வகை அரிசி மற்றும் சிறுதானிய உணவுகள், 8 வகையான சைடு டிஷ், 6 பஃபே வகைகள், 15 வகை தோசைகள், 17 வகையான ஐஸ்கிரீம், 7 வகையான இயற்கை பழச்சாறு உள்பட 109 வகையான உணவுகள் விருந்தில் பரிமாறப்படுகின்றன.

அதிமுக, பாஜக கூட்டணியைக் காட்டும் வகையில் தாமரை மற்றும் இரட்டை இலை சின்னத்தை போல் சில உணவு வகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்