அமெரிக்காவின் அடுத்த அதிபராக திங்கட்கிழமை (ஜனவரி 20) பொறுப்பேற்க உள்ள டோனல்ட் டிரம்ப் அளித்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியத் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீத்தா அம்பானி அணிந்திருந்த மரகத நெக்லஸ் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதன் விலை குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த நெக்லஸ் ரூ.500 கோடி மதிப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
நீத்தா அம்பானியின் ஆடை, அணிகலன் தேர்வு பிரசித்திபெற்றவை. எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவர் அணியும் உடைகள், அணிகலன்கள் குறித்து பரவலாக பேசப்படும்.
இந்நிலையில் டிரம்ப் அளித்த விருந்து நிகழ்வில் கலந்துகொண்டபோது நீத்தா அம்பானி கருப்பு நிற பட்டுப் புடவையும் மரகத கற்கலால் ஆன நெக்லஸ் ஒன்றையும் அணிந்திருந்தார்.
இதற்கிடையே, பச்சை மரகதக் கல் உள்ள அணிகலன்களை அணிந்தால் உடல் நலத்துடனும், செல்வ செழிப்புடனும் இருக்கலாம் என சிலர் அறிவுறுத்தியதால்தான் நீத்தா அம்பானி இந்த நெக்லஸை அவ்வப்போது அணிவதாகக் கூறப்படுகிறது.