தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எச்-1பி விசா இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற அச்சம்

2 mins read
78b39acd-b657-4509-b8a6-6cc3908e75f3
லாஸ் ஏஞ்சலிஸ் அனைத்துலக விமான நிலையத்தில் பயணிகள் குடிநுழைவுச் சோதனையை முடிக்கின்றனர். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

பெங்களூரு: அமெரிக்காவின் சாண்டா கிளாராவில் பணியாற்றும் வாகன வடிவமைப்புப் பொறியாளரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குமார், விடுமுறைக்கு மும்பை சென்றுள்ளார்.

ஆனால், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்பதற்கு முன்பு அமெரிக்காவுக்குத் திரும்பி விடுமாறு அவரது வழக்கறிஞர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து வெளியேறுவதையும் எச்-1பி வைத்திருக்கும் இந்தியர்கள் தவிர்த்து வருகின்றனர்.

தங்களுடைய முதலாளிகளும் அமெரிக்காவிலிருந்து வெளியேற வேண்டாம் என்று தங்களிடம் கூறியிருப்பதாக பெரும்பாலான எச்-1பி வைத்துள்ள இந்தியர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்துள்ளனர்.

திரு டிரம்ப் பதவியேற்புக்குப் பிறகு குடிநுழைவு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படலாம் என்பதே அதற்கு காரணம்.

குறைந்தபட்ச கல்வித் தகுதியான பட்டப்படிப்பு முடித்து குறிப்பிட்ட துறைகளில் திறன்பெற்ற வெளிநாட்டவர்களுக்கு அமெரிக்காவில் எச்-1பி தற்காலிக விசா வழங்கப்படுகிறது.

இது, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுகிறது. இது, கிரீன்கார்ட் என்று குறிப்பிடப்படும் நிரந்தரவாசத் தகுதியைப் பெறுவதற்கான முதல் படியாகும்.

அமெரிக்காவில் உள்ள இந்தியத் தொழில் நிபுணர்கள் தங்களுடைய அமெரிக்க கனவுகளை நிறைவேற்றும் குடியேற்றக் கொள்கைகளில் டிரம்ப் மாற்றங்கள் செய்வது குறித்து ஆர்வமாக உள்ளனர்.

மெக்சிகன் நாட்டவர்களுக்குப் பிறகு அமெரிக்காவில் இரண்டாவது பெரிய புலம்பெயர்ந்த குழுவாக இந்தியர்கள் உள்ளனர். அவர்களிடையே எச்-1பி விசா முக்கிய விவாதமாக இருந்து வருகிறது.

2023ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து வந்த 278,148 வல்லுநர்களுக்கு எச்-1பி விசாக்கள் வழங்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டதில் 72 விழுக்காட்டிற்கும் அதிகமாகவும், சீனக் குடிமக்கள் 12 விழுக்காடாகவும் உள்ளனர்.

எச்-1பி வைத்திருப்பவர்களில் மூன்றில் இருவர் சராசரியாக US$118,000 (S$162,000) ஆண்டு சம்பளத்துடன் கணினி தொடர்பான வேலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்