புதுடெல்லி: கடந்த 101 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழை காரணமாக, டெல்லியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் டிசம்பர் 29 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர முடிவில், 41.22 மில்லி மீட்டர் அளவுக்கு மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
கடந்த 101 ஆண்டுகளில் டிசம்பர் மாதத்தில் ஒரே நாளில் பதிவான ஆக அதிகமான மழைப்பொழிவு இ்து என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு கடந்த 1923ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி, டெல்லியில் 75.7 மில்லி மீட்டர் அளவு மழை பெய்திருந்தது. அதன் பிறகு இப்போதுதான் டிசம்பர் மாதத்தில் இந்த அளவுக்கு மழை பெய்துள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
கனமழை காரணமாக டெல்லியில் காற்றுத் தரக் குறியீடும் முன்னேற்றம் கண்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி நேர நிலவரப்படி, அங்கு காற்றின் தரம் 152, அதாவது திருப்திகரம் என்ற அளவில் பதிவாகி இருந்தது.