60 விமானச் சேவைகள் ரத்து

60 விமானச் சேவைகள் ரத்து

1 mins read
கனமழையால் விமானப் போக்குவரத்து பாதிப்பு; 11 பேர் உயிரிழப்பு
f67e4df7-18cc-4c3d-a76d-50e22d1d2fb5
புதுடெல்லி விமான நிலையம் - கோப்புப் படம்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்த வார திடீர் கனமழையால் இறந்தவர்களின் எண்ணிக்கை டெல்லியில் 11 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் நால்வர் நீரில் மூழ்கியிருந்த சுரங்கப்பாதைகளில் சிக்கி உயிரிழந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

நகரின் சில பகுதிகளில் சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின, போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன. மின்சாரம், நீர்வரத்து துண்டிக்கப்பட்டது.

விமானக் கண்காணிப்புத் தளமான ஃபிளைட்அவேரின் தகவல்கள்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதுடெல்லியின் முக்கிய விமான நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட 60 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட முனையத்திலிருந்து பெரும்பாலான விமானங்கள் மற்ற இரண்டிற்கும் திருப்பிவிடப்பட்டன என்று ஒரு விமான நிலைய அதிகாரி கூறினார்.

டெல்லி விமான நிலையம் நாட்டின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான நிலையமாகும்.

விமானம் ரத்து செய்யப்பட்டது குறித்து இண்டிகோ செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்கவில்லை, ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளரும் தொலைபேசி அழைப்புக்கு உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்