தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெலுங்கானாவில் கனமழையால் 1,039 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் கடும் பாதிப்பு

1 mins read
b9fa23fc-f056-4666-88f5-d93fd1de3ca7
தெலுங்கானா முதல்​வர் ரேவந்த் ரெட்​டி வெள்​ளம் பாதித்த இடங்​களை விமானம் மூலம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை வேகப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். - படம்: ஊடகம்

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்த பலத்த மழை காரணமாக, 794 இடங்​களில் 1,039 கிலோ மீட்டர் தூரம் வரை சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக ​அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கன மழையால் இது​வரை 2 பேர் உயி​ரிழந்​துவிட்டனர் என்றும் பல கால்​நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்​லப்​பட்​டுள்​ளன என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்​பும் துண்டிக்​கப்​பட்​டுள்​ளது.

நெடுஞ்​சாலைகள் துண்​டிக்​கப்​பட்​டுள்​ள​தால் லாரி​கள், கொள்கலன் வாகனங்கள், பெட்ரோல், டீசல் டேங்​கர்​கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளன.

கன மழை​யால் ரயில் சேவை பாதிப்புக்குள்ளானது. தென் மத்​திய ரயில்வே மண்​டலம், பல ரயில்​களை ரத்து செய்​துள்​ள​தாக அறி​வித்​துள்​ளது. மேலும் பல ரயில்​கள் மாற்​றுப் பாதைகளில் திருப்பி விடப்​பட்​டுள்​ளன.

கனமழையால் நெல், பருத்​தி, வாழை, தக்​காளி, மிள​காய், மஞ்​சள் ஆகிய பயிர்​கள் மூழ்கி விட்​டதாக இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவித்தது.

பல கிராமங்​களில் போக்​கு​வரத்து துண்​டிக்​கப்​பட்டு விட்​ட​தால் அங்​குள்ள மக்​களுக்கு அரசு தரப்​பில் ‘டிரோன்’​கள் மூலம் உணவுப் பொட்​டலங்​கள், தண்​ணீர் பாட்​டில்​கள், மருந்துகள் ஆகியவை வழங்​கப்​படும் நிலையில், பல மாவட்​டங்​களில் கல்வி நிலையங்களுக்கு விடு​முறை விடப்​பட்​டது.

தெலுங்​கானா மாநிலத்​தில் கிருஷ்ணா, கோதாவரி அணை​கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் பல ஏரி​கள், குளங்​கள், நீர்​நிலைகள் என அனைத்​தும் நிரம்​பிய​தால் வெள்​ளம் பெருக்​கெடுத்​துள்​ளது.

குறிப்புச் சொற்கள்