டெல்லியின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையம் திறப்பு

டெல்லியின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையம் திறப்பு

2 mins read
ஆசியாவிலேயே மிகப்பெரிய ஜேவார் விமான நிலையத்திலிருந்து ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கு ஒரு விமானம் புறப்படும்
d44ef1de-be6c-4787-8b5d-a320f66e2baf
ஜேவார் விமானநிலையத்தின் முதல் முனையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை திறந்துவைத்தார். தொடக்க விழாவில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர். - படம்: எக்ஸ்பென்சிவ் நியூஸ்

ஜேவார்: ஆசி​யா​விலேயே மிகப்​பெரிய​ விமான நிலையமாக உருவாகிவரும் ஜேவார் அனைத்துலக விமான​ நிலை​யத்தின் முதல் முனையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை (மார்ச் 28) தொடங்​கி வைத்தார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜேவார் பகுதியில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்திலிருந்து ஒவ்வோர் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு விமானம் புறப்படும். இது உத்தரப்பிரதேசத்தின் இணைப்பையும் வளர்ச்சியையும் பெருமளவில் ஊக்குவிக்கும் என்று அவர் கூறினார்.

டெல்லியின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமான ஜேவார் விமான நிலையம் “ஒட்டுமொத்த வட இந்தியாவையும் உலகத்துடன் இணைக்கிறது,” என்றார் அவர்.

டெல்லி புறநகர்ப் பகு​தி​யான நொய்​டா​வில் கட்டப்படும் ஜேவார் விமான நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரிய விமான நிலையமாக உருவாகி வருகிறது.
டெல்லி புறநகர்ப் பகு​தி​யான நொய்​டா​வில் கட்டப்படும் ஜேவார் விமான நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரிய விமான நிலையமாக உருவாகி வருகிறது. - படம்: ஃப்ரீ பிரஸ் ஜர்னல்

ஜேவார் விமான நிலையம்: வட இந்தியாவை உலகத்துடன் இணைக்கும் புதிய நுழைவாயில்

விமான நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் கிட்டத்தட்ட 11,200 கோடி ரூபாய் (S$1.5 பில்லியன்) முதலீட்டில் நிறைவடைந்துள்ளன.

இது முழு​மை​யாகச் செயல்​பாட்​டுக்கு வரும்​போது ஆண்​டுக்கு 7 கோடி பயணி​களைக் கையாளும் திறன் கொண்​ட​தாக இருக்​கும்.

ஏறக்குறைய 7,200 ஏக்கர் பரப்பளவில், ஆறு ஓடுதளங்களுடன் அமையவுள்ள இந்தப் மிகப்பெரும் திட்டம், நியூயார்க்கின் சென்ட்ரல் பூங்காவைவிட எட்டு மடங்கு பெரியதாகும்.

இந்த விமான நிலையம் நொய்டா, மீரட், காசியாபாத், மதுரா, ஆக்ரா போன்ற உத்தரபிரதேசத்தின் முக்கிய நகரங்களுக்கு முதன்மை அனைத்துலக விமான நிலையமாகச் செயல்படும். பல புனிதத் தலங்கள், சுற்றுலாத் தலங்களுக்கான நுழைவாயிலாகவும் அமையும். 
இந்த விமான நிலையம் நொய்டா, மீரட், காசியாபாத், மதுரா, ஆக்ரா போன்ற உத்தரபிரதேசத்தின் முக்கிய நகரங்களுக்கு முதன்மை அனைத்துலக விமான நிலையமாகச் செயல்படும். பல புனிதத் தலங்கள், சுற்றுலாத் தலங்களுக்கான நுழைவாயிலாகவும் அமையும்.  - படம்: டைம்ஸ் புரோபர்டிஸ்

சுவிட்சர்லாந்தின் ‘சூரிச் ஏர்போர்ட் இன்டர்நேஷனல்’ நிறுவனம் இதில் முக்கிய முதலீட்டாளராக உள்ளது.

எரிபொருள் மீதான வரியைக் குறைத்து விமான நிறுவனங்களை ஈர்த்து வருகிறது. இண்டிகோ நிறுவனம் இங்கிருந்து தனது சேவையைத் தொடங்கும் முதல் நிறுவனமாக ஒப்பந்தம் செய்துள்ளது.

விமான நிலைய வருகையால் ஜேவார், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது.

மிகப் பெரும் தொழில்துறை வளர்ச்சித் திட்டம்

தொழில் துறை​யினரைப் பெரு​மள​வில் ஈர்க்​கும் வித​மாக, விமான நிலை​யத்​தைச் சுற்றி தொழில், தளவாடங்​களை மைய​மாகக் கொண்ட தொகுப்​பு​கள் (கிளஸ்​டர்​கள்) உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன.

விளைநிலங்கள் தொழிற்சாலைகளாகவும், வணிக வளாகங்களாகவும் மாறி வருகின்றன. ஆடைப் பூங்கா, மருத்துவப் பூங்கா, பொம்மை உற்பத்திப் பூங்காக்கள் அமையவுள்ளதால் இப்பகுதி ஒரு தொழில்துறை மையமாக உருவெடுத்துள்ளது.

எனினும், அதிவேக ரயில், சாலை இணைப்புகள் முழுமையடைய இன்னும் சில ஆண்டுகள் ஆகும். நவி மும்பையில் அதானி குழுமம் உருவாக்கிய இரண்டாவது விமான நிலையத்தைப் போலவே, ஜேவார் விமான நிலையமும் இந்தியாவின் வான்வழிப் போக்குவரத்து வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

உலகளா​விய விமானப் போக்​கு​வரத்து மைய​மாக இந்தியாவை உருவாக்கும் திட்டத்தில் இந்த விமான நிலையம் ஒரு குறிப்​பிடத்​தக்க முன்னேற்றம் என்று இந்திய அரசு தெரி​வித்​துள்​ளது.

இது ஐரோப்​பா​வின் நுழைவு வாயி​லாக விளங்​கப் போகிறது என்று நிபுணர்​கள் கணித்​துள்​ளனர்.

ஜேவார் விமான நிலையம் இந்தியாவின் வான்வழிப் போக்குவரத்து வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
ஜேவார் விமான நிலையம் இந்தியாவின் வான்வழிப் போக்குவரத்து வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. - படம்: எக்னாமிக்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்