பேரிடர் பட்டியலில் வெயில் தாக்கத்தை சேர்க்கவேண்டும்: மத்திய அரசுக்குப் பரிந்துரை

பேரிடர் பட்டியலில் வெயில் தாக்கத்தை சேர்க்கவேண்டும்: மத்திய அரசுக்குப் பரிந்துரை

1 mins read
cc39062f-83f8-4726-9b27-951dc292d3a7
படம்: - இணையம்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவின் மத்திய அரசாங்கம் அதன் பேரிடர் மேலாண்மைத் திட்டங்களில் வெப்ப அலைகள் போன்ற புதிய, வளர்ந்துவரும் பேரிடர்களைச் சேர்க்கவேண்டும் என்று நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.

முன்னதாக உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த வாரம் மாநிலங்களவையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில் வெயில் தாக்கத்தைப் பேரிடர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. அதன்படி, அரசின் புதிய, அதிகரித்துவரும் பேரிடர் மேலாண்மை திட்டத்தில் வெப்ப அலையின் தாக்கம் உள்ளிட்டவற்றைச் சேர்க்க அந்தக் குழு பரிந்துரைக்கிறது.

மேலும், பேரிடர் மேலாண்மை சட்டம், பொருத்தமானதாகவும் வளர்ந்துவரும் பேரிடர் அபாயங்களுக்கு ஏற்பவும் இருப்பதை உறுதிசெய்ய வல்லுனர்கள் மற்றும் அனைத்து தரப்பினருடன் கலந்தாலோசித்து பேரிடர் பட்டியலை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து புதுப்பிப்பதற்கான வழிமுறையையும் நிறுவவேண்டும் என கூறப்பட்டுள்ளது. சேதங்களைக் குறைக்கவும் விரைவாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட பேரிடர் எதிர்ப்பு உள்கட்டமைப்புகள், போக்குவரத்து அமைப்புனகளில் அதிக முதலீடு செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மேலவை நாடாளுமன்ற உறுப்பினர் ராதா மோகன் தாஸ் அகர்வால் தலைமையிலான 31 பேரைக் கொண்ட குழு, காலநிலை மாற்றம், அதிகரித்துவரும் பேரிடர் அதிர்வெண் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு நீண்டகால பேரிடர் தயார்நிலை குறித்து ஆய்வுசெய்து திட்டமிடுமாறு மத்திய அமைச்சகத்தை வலியுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்