சென்னை விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணம் அதிகரிப்பு

சென்னை விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணம் அதிகரிப்பு

கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

11 Oct 2026 - 3:16 pm

1 mins read

சென்னை: சென்னை விமான நிலை​யத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்​திய விமான நிலைய ஆணை​யம், இந்தக் கட்டண உயர்வை அறி​வித்​துள்​ளது.

அதன்​படி, கார்​களுக்கு 30 நிமிடங்​கள் வரை ரூ.85லிருந்து ரூ.90ஆகவும், ஒரு மணி நேரம்வரை ரூ.110லிருந்து ரூ.115ஆகவும், 2 மணிநேரம்வரை ரூ.165லிருந்து ரூ.175ஆகவும் உயர்த்தப்பட்டுள்​ளது.

அதே​போல், ஒவ்​வொரு மணி நேரத்​துக்​கும் கட்​ட​ணம் அதிகரிக்கிறது. கார்​கள் 10 மணிநேரத்திலிருந்து 24 மணிநேரம்வரை நிறுத்துமிடங்களில் நிறுத்​தப்​பட்​டிருந்​தால் அதற்கான கட்டணம் ரூ.550லிருந்து ரூ.580ஆக அதிகரிக்கும்.

இரு சக்கர வாக​னங்​களுக்​கு, ஒரு மணி நேரத்​துக்கு ரூ.20, இரண்டு மணிநேரத்​துக்கு ரூ.35 எனப் பழைய கட்​ட​ணமே வசூலிக்​கப்​பட​வுள்​ளது.

அதற்கு மேல் நிறுத்​தப்​படும் ஒவ்​வொரு மணி நேரத்​துக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை கூடு​தல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இருசக்கர வாக​னங்​கள் 10 மணிநேரத்திலிருந்து 24 மணி நேரம் வரை நிறுத்​தப்​பட்​டால் ரூ.100லிருந்து ரூ.105ஆக கட்டணம் கூடும்.

விமான நிலை​யத்​தில் பணி​யாற்​றும் ஊழியர்​கள், தங்​கள் கார்களுக்கு மாதம் ரூ.580, இரு சக்கர வாக​னங்​களுக்கு மாதம் ரூ.230 கட்​ட​ணம் செலுத்த வேண்​டும். இந்தப் புதிய கட்​டண முறை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) அமலுக்​கு வந்​தது.

குறிப்புச் சொற்கள்
விமான நிலையம்சென்னைகட்டணம்வாகன நிறுத்துமிடம்