புதுடெல்லி: உலக அளவில் நடத்தப்பட்ட பத்திரிகை சுதந்திரத்திற்கான தரவரிசையில் இந்தியா 151வது இடத்தைப் பிடித்துள்ளது.
‘ரிப்போா்ட்டா்ஸ் வித்அவுட் பாா்டா்ஸ்’ நிறுவனத்தின் மூலம் 180 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.
பின்லாந்து, எஸ்தோனியா, நெதா்லாந்து ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களைக் கைப்பற்றியுள்ளன.
அமெரிக்கா 57வது இடத்திலும் ஆஸ்திரேலியா 29வது இடத்திலும் கனடா 21வது இடத்திலும் உள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டுக்கான தரவரிசையில் 159வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 8 இடங்கள் முன்னேறி 151வது இடத்துக்கு வந்துள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள பத்திரிகையாளா்கள், கொள்கை வகுப்பாளா்கள் உள்ளிட்ட 5,000 பேரிடம் கருத்துகள் சேகரிக்கப்பட்டு இந்தத் தரவரிசை தயாா் செய்யப்பட்டுள்ளதாக புதுடெல்லியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அந்நிறுவனத்தின் துணை இயக்குநா் திபாட் புருட்டின் தெரிவித்தாா்.
இதுகுறித்து ‘ரிப்போா்ட்டா்ஸ் வித்அவுட் பாா்டா்ஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் ஏறக்குறைய 900 தனியாா் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் உள்ளன. அவற்றில் 50% செய்தித் தொலைக்காட்சிகள்.
“ஒட்டுமொத்தமாக 39 கோடி பிரதிகளுடன் 20,000 நாளிதழ்கள் உள்பட 20 மொழிகளில் 1.40 லட்சம் பதிப்புகள் வெளியிடப்படுகின்றன,” எனத் தெரிவித்துள்ளது.