தற்போதைய பருவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு மில்லியன் மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதி அளவை இந்தியா குறைக்காது என்று தகவல்கள் கூறுகின்றன.
இவ்வாண்டு குறைந்துவரும் சர்க்கரை உற்பத்தியால் இந்தியா, அதன் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தக்கூடும் என்ற ஊகங்களுக்கு மாறாக இது உள்ளது.
சர்க்கரை உற்பத்தியைப் பொறுத்தளவில் உலகின் இரண்டாவது ஆகப் பெரிய நாடான இந்தியா, செப்டம்பர் 2025 வரை 1 மில்லின் மெட்ரிக் டன்னுக்கான ஏற்றுமதி அனுமதியை ஜனவரியின்போது விதித்தது.
அப்போது வெளிநாட்டுச் சந்தைகளுக்கு மிகையான சர்க்கரை அளவு இருப்பதாக நம்பப்படுகிறது.
“ஏற்றுமதிகளுக்குத் தடை எனக் கருதுவதற்கான காரணம் ஏதும் இல்லை. இந்த ஆண்டுதோறும் எங்களுக்குத் தேவைக்கு அதிகமான இருப்பு இருக்கும் என்று தற்போதைய தகவல்கள் காட்டுகின்றன. அடுத்த ஆண்டின் உற்பத்தி, இந்த ஆண்டின் உற்பத்தியை மிஞ்சும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது,” என்று இந்த விவகாரத்தை நன்கு அறிந்த வட்டாரங்கள் ராய்ட்டர்சிடம் தெரிவித்தன.
சர்க்கரை உற்பத்தி ஆலைகள், இவ்வாண்டு 26.4 மில்லியன் டன் சர்க்கரை அளவை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டுத் தேவை, ஏறத்தாழ 28 மில்லியன் டன்னாக இருக்கும் என்று அரசாங்க புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.
2024 அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியுள்ள தற்போதைய பருவத்தில், கடந்த பருவத்திலிருந்து எஞ்சியுள்ள மிகையளவான 8 மில்லியன் டன் சர்க்கரையும் சந்தைக்கு விடப்பட்டுள்ளது.

