தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகளாவிய ஏஐ கட்டமைப்பை இந்தியா உருவாக்கி வருகிறது: மோடி பெருமிதம்

1 mins read
1bb71c18-7eee-44e2-ade8-79486429be03
பிரதமர் மோடி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியா இனி தொழில்நுட்பத்தின் நுகர்வோர் மட்டுமல்ல, தொழில்நுட்பம் மூலம் மாற்றத்தின் முன்னோடியாகவும் மாறியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற புவி அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாட்டை தொடங்கி வைத்த அவர், ஆராய்ச்சி, மேம்பாட்டில் தனியார் துறை முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதியை விடுவித்தார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி கடந்த 10-11 ஆண்டுகளில் இந்தியா தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுகிறது என்பது நிரூபணம் ஆகி உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்தியா இனி தொழில்நுட்பத்தின் நுகர்வோர் மட்டுமல்ல, தொழில்நுட்பம் மூலம் மாற்றத்தின் முன்னோடியாகவும் மாறியுள்ளது என்றார் திரு மோடி.

“பல்கலைக்கழகங்கள் முழுவதும் ஆராய்ச்சிகள், புத்தாக்கத்தை மேம்படுத்த அறக்கட்டளையை நிறுவியுள்ளோம். அறிவியல் கண்டுபிடிப்புகள் ​புதுமையை உள்ளடக்கியதாக மாறும்போது, சிறந்த சாதனைகளுக்கான அடித்தளம் அமைக்கப்படுகிறது.

“அறிவியல், தொழில்நுட்பத் துறையில் உலகளாவிய புதிய மாற்றத்தை நாங்கள் காண்கிறோம். மாற்றத்தின் வேகம் அதிகமானது,” என்றார் பிரதமர் மோடி.

21ஆம் நூற்றாண்டில், வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பாக உலகம் முழுவதும் உள்ள நிபுணர்கள் ஒன்றிணைய வேண்டிய அவசியம் எழுந்ததாகக் குறிப்பிட்ட அவர், அப்போது ஏற்பட்ட யோசனைதான் தற்போது நடைபெறும் மாநாட்டுக்கு வழிவகுத்தது என்றார்.

கொவிட் காலத்தில் கடினமாக சூழலில் உள்நாட்டத் தடுப்பூசியை இந்தியா உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்