தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புழுங்கல் அரிசி ஏற்றுமதி வரி மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு

1 mins read
8709184a-cc47-458c-a83b-08632c008c3e
Labourers uses a shovel to separate grains of paddy rice from the husk at a wholesale grain market in Amritsar on October 5, 2023. (Photo by Narinder NANU / AFP) - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: புழுங்கல் அரிசிக்கான 20 விழுக்காடு ஏற்றுமதி வரியை அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிவரை நீட்டிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

உள்நாட்டில் போதிய அளவு அரிசி இருப்பில் உள்ளதை உறுதிப்படுத்தி, விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில் இவ்வாண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி அந்த வரி அறிமுகப்படுத்தப்பட்டது.

முதலில் இம்மாதம் 16ஆம் தேதியுடன் அது நடப்பிலிருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பாசுமதி அரிசி தவிர்த்த மற்றவகை அரிசி ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், மற்ற நாடுகளின் உணவுத் தேவைகளையும் கருத்தில்கொண்டு, அந்நாட்டு அரசுகளின் வேண்டுகோள்களின் அடிப்படையில் அரிசி ஏற்றுமதியை இந்திய அரசு அனுமதித்து வருகிறது.

அவ்வகையில், சிங்கப்பூர் அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அரிசி ஏற்றுமதித் தடையிலிருந்து சிங்கப்பூருக்கு இந்திய அரசு விதிவிலக்கு அளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்