அமெரிக்க இறக்குமதிகளுக்கு வரியைக் குறைக்கும் இந்தியா

1 mins read
d848fafa-1b21-4764-bbae-ae2810381bbe
அமெரிக்காவுடனான வர்த்தகப் பூசலைத் தவிர்க்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: அமெரிக்காவுடனான வர்த்தகப் பூசலைத் தவிர்க்க இந்தியா 23 பில்லியன் டாலர் அமெரிக்க இறக்குமதிகளுக்கு வரிக்குறைப்பு செய்யத் திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு செய்வதன் மூலம் 66 பில்லியன் டாலர் மதிப்புடைய ஏற்றுமதிகளுக்கான வரிவிதிப்பை இந்தியா தவிர்க்கலாம் என்று நம்பப்படுகிறது. 

இரு நாடுகளின் அரசாங்க அதிகாரிகள் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் முதற்கட்டமாக அமெரிக்கப் பொருள்களுக்கு 55 விழுக்காடு வரிக்குறைப்பு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 

இருப்பினும், இதுதொடர்பாக இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.

குறிப்புச் சொற்கள்