இந்தியாவுடனான வர்த்தக உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து 50 விழுக்காட்டு வரி 18 விழுக்காடாகக் குறைக்கப்படுகிறது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியப் பொருள்களுக்கு 25 விழுக்காடு, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு 25 விழுக்காடு என இந்தியாமீது டிரம்ப் கடந்த ஆண்டு 50 விழுக்காட்டு வரியை விதித்திருந்தார்.
ஆசிய நாடுகளிலேயே இந்தியா மீது விதிக்கப்பட்ட வரிதான் ஆக அதிகமாக இருந்தது.
தற்போது 18 விழுக்காடாகக் குறைக்கப்பட்ட பின்னர், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைப்போல ஆசியாவில் குறைவான வரி விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியா இடம்பெற்றுள்ளது.
சீனாவுக்கு 37 விழுக்காடு, மியன்மாருக்கு 40 விழுக்காடு என ஆசியாவில் ஆக அதிகமான வரி விதிக்கப்பட்ட நாடுகளாகத் தொடரும் வேளையில் ஜப்பானும் தென்கொரியாவும் 15 விழுக்காட்டு வரியைச் சுமக்கின்றன.
இந்தியாவின் அண்டை நாடுகளான பங்ளாதேஷுக்கு 20 விழுக்காடு, பாகிஸ்தானுக்கு 19 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு அவற்றைவிட சற்று குறைவான வரி தற்போது போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
..

