தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிரம்ப்பின் வெற்றி இந்தியாவை அச்சுறுத்தாது: ஜெய்சங்கர்

1 mins read
0784efbb-5728-400b-802c-486be493a15b
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

மும்பை: இவ்வாண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலில் திரு டிரம்ப் வெற்றிபெற்றது பல நாடுகளுக்கிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அவரின் வெற்றி இந்தியாவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

மும்பை நகரில் நடைபெற்ற கல்வி உபகாரச் சம்பளம் தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பல அமெரிக்க அதிபர்களுடன் வலுவான உறவை வளர்த்துக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

“பிரதமர் மோடி முதன்முறையாக வா‌ஷிங்டனுக்குப் பயணம் மேற்கொண்டபோது பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தார். பின்னர் டோனல்ட் டிரம்ப், ஜோ பைடன் ஆகியோர் அப்பொறுப்பை வகித்தனர். திரு மோடி அத்தகைய நெருங்கிய உறவுகளை எளிமையான முறையில் வளர்த்துக்கொள்கிறார். இப்போது பல நாடுகள் அமெரிக்காவை எண்ணி அச்சப்படுகின்றன. ஆனால், உண்மையைச் சொன்னால் நாங்கள் அத்தகைய நாடுகளில் ஒன்றல்ல,” என்றார் திரு ஜெய்சங்கர்.

திரு டிரம்ப், தேர்தலில் வெற்றிபெறப்போவது தெரிந்தபிறகு அவருக்கு முதலில் வாழ்த்து தெரிவித்த மூன்று உலகத் தலைவர்களில் திரு மோடியும் ஒருவர்.

இதற்கிடையே, உலகில் இருக்கக்கூடிய பல வகையான வாய்ப்புகளை ஆராய இந்தியா விரும்புவதாகவும் திரு ஜெய்சங்கர் தெரிவித்தார். சுற்றுலா, கல்வி உள்ளிட்ட துறைகள் அவற்றில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்