தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகின் சிறந்த உணவுகள் கொண்ட 100 நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 12ஆம் இடம்

1 mins read
ef5fa0f0-2248-4fb2-bbc4-d13f7239b18c
இந்தியாவின் சிறந்த உணவுகளாக ரொட்டி, நான் (naan), சட்னி, பிரியாணி, பருப்பு, தந்தூரி கோழி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. - படம்: ஊடகம்

புதுடெல்லி: உலகின் மிகச்சிறந்த உணவுகளைக் கொண்ட நூறு நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 12வது இடம் கிடைத்துள்ளது.

தனியார் பயண வழிகாட்டி நிறுவனமான ‘டேஸ்ட் அட்லஸ்’ வெளியிட்டுள்ள இப்பட்டியலில்,

கிரீஸ் 4.6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இத்தாலி, மெக்சிகோ, ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகியவை முறையே அடுத்த நான்கு இடங்களைப் பெற்றுள்ளன.

ஆறு முதல் 10 வரையிலான இடங்களில் துருக்கி, இந்தோனீசியா, பிரான்ஸ், ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் உள்ளன.

போலந்துக்கு 11வது இடம் கிடைத்துள்ளது. பாரம்பரியமான, சுவையான உணவு வகைகளுக்குப் பெயர்பெற்ற இந்தியா 12வது இடத்தில் உள்ளது என்றும் இந்தியாவுக்கு மொத்தம் 4.2 புள்ளிகள் கிடைத்திருப்பதாகவும் பட்டியலை வெளியிட்ட ‘டேஸ்ட் அட்லஸ்’ நிறுவனம் கூறியது.

சுவைமிகு உணவுக்குப் பெயர் பெற்ற தாய்லாந்து, ஈரான், லெபனான் ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டது சுற்றுலாப் பயணிகளுக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்பட்டியலில் அமெரிக்கா 13வது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் சிறந்த உணவுகளாக ரொட்டி, நான் (naan), சட்னி, பிரியாணி, பருப்பு, பட்டர் கோழி, தந்தூரி கோழி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

சில சிறந்த உணவகங்களைப் பற்றிய விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்