ஐஃபோன் ஏற்றுமதியில் இந்தியாவுக்குப் புதிய மைல்கல்

1 mins read
ba57295d-725d-42e7-b300-9a5bcb810146
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் மின்னணுப் பொருள்களின் உற்பத்தி ஆறு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அவற்றின் ஏற்றுமதி எட்டு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். - படம்: ஃபோர்ப்ஸ் இந்தியா

புதுடெல்லி: ‘ஐஃபோன்’ ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2025ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து ஏறக்குறைய ரூ.4.51 லட்சம் கோடி மதிப்புள்ள ஐஃபோன்களை ஆப்பிள் நிறுவனம் ஏற்றுமதி செய்திருப்பதாக ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் மின்னணுப் பொருள்களின் உற்பத்தி ஆறு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அவற்றின் ஏற்றுமதி எட்டு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த வளர்ச்சியின் மூலம் இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் மூன்று பொருள்களில் ஒன்றாக மின்னணுப் பொருள்கள் உருவெடுத்துள்ளது என்றார் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

நடப்பாண்டில் இந்தியாவில், நான்கு பகுதி மின்கடத்தி தொழிற்சாலைகள் துவங்கப்பட உள்ளதாகவும் நாடு முழுவதும் மின்னணு உற்பத்தித் துறையில் தற்போது 25 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளதாகவும் அமைச்சர் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தில் ஆப்பிள் நிறுவனம் இணைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இது நேரடியாகவும் மறைமுகமாகவும் 3.50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஐந்து ஐஃபோன் தொழிற்சாலைகள் உள்ளன.

குறிப்புச் சொற்கள்