தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவில் இயல்பைவிட 7 விழுக்காடு அதிக பருவமழை பதிவு

1 mins read
f8105a00-c2ff-4bda-b45c-c18cad1ffaaf
ராஜஸ்தான், லடாக், நாகாலாந்து, மணிப்பூர், சிக்கிம் மாநிலங்களில் மிக அதிக மழை பெய்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது.

இந்தப் பருவமழை இதுவரை இயல்பைவிட 7 விழுக்காடு அதிகம் பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அந்தவகையில் இயல்பான அளவான 418.9 மில்லிமீட்டரை விட அதிகமாக 447.8 மில்லிமீட்டர் மழைப் பதிவாகி இருக்கிறது.

அதேநேரம் இது பல்வேறு வட்டாரங்களுக்கு இடையே மிகப்பெரிய மாறுபாடுகளைக் கொண்டுள்ளது.

அந்தவகையில் ராஜஸ்தான், லடாக், நாகாலாந்து, மணிப்பூர், சிக்கிம் மாநிலங்களில் மிக அதிக மழை பெய்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 384.7 மில்லிமீட்டர் (இயல்பான அளவு 200.4 மில்லிமீட்டர்) மழை பெய்திருக்கிறது.

அதேபோல், லடாக் வட்டாரத்தில் 30 மில்லிமீட்டர் மழை (இயல்பான அளவு 10.7 மில்லிமீட்டர்) பெய்திருக்கிறது.

மேலும் மத்தியப் பிரதேசம், குஜராத், டையூ-டாமன், ஜார்க்கண்ட், அசாம் போன்ற மாநிலங்களில் 20 முதல் 59 விழுக்காடு வரை அதிக மழை பெய்தது.

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், இமாசலப் பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் இயல்பான மழை அளவை 19 விழுக்காடு சராசரியில் பெற்றிருக்கின்றன.

அதேநேரம், அருணாசலப் பிரதேசம், அசாம், பீகார், டெல்லி, மகாராஷ்டிரா, லட்சத்தீவுகள் போன்றவை 20 முதல் 59 விழுக்காடு வரை குறைவான மழைப்பொழிவைப் பெற்று இருக்கின்றன.

இந்தத் தகவல்களை இந்திய வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்