இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம் சோதனையானது: ஜெய்ராம் ரமேஷ்

இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம் சோதனையானது: ஜெய்ராம் ரமேஷ்

1 mins read
f2d158de-26bb-4e42-8429-631a1c812fac
காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ். - படம்: இந்துஸ்தான் டைம்ஸ்

புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு அவசரம் காட்டியதாகக் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி சரியான முடிவு எடுத்திருந்தால் இந்திய விவசாயிகள் தங்கள் வேதனையிலிருந்தும் துயரத்திலிருந்தும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். மேலும் இந்திய இறையாண்மை பாதுகாக்கப்பட்டிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

பிப்ரவரி 2 ஆம்தேதி இரவு இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை டோனல்ட் டிரம்ப் அறிவிப்பதை உறுதி செய்யப் பிரதமர் மோடியைக் கட்டாயப்படுத்தியது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மோடியின் பலவீனத்தைக் காட்டுவதாகவும் அது இந்தியாவுக்குச் சோதனையானது என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்