வரும் ஆண்டின் தொடக்கத்தில் ஜப்பானுடன் கரிமம் தொடர்பான ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்ய விரும்புகிறது.
தென்கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடனும் இதேபோன்ற பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக நாடுகளில் ஆக அதிக அளவு கரிமத்தை வெளியேற்றும் நாடான இந்தியா, கரிமத்தை குறைப்பதற்கான முதலீடுகளையும் தொழில்நுட்பங்களையும் ஈர்க்க விரும்புகிறது.
இதன்வழி நாட்டின் காற்றுத் தூய்மைக்கேட்டைக் குறைக்கவும் அது உறுதி பூண்டுள்ளது என்று கரிம திட்டங்கள் பற்றி விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானுடன் இருதரப்பு ஒப்பந்தம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கையெழுத்திடப்படும் என்றும் மார்ச் 2026ல் நிதியாண்டு முடிவதற்குள் தென் கொரியா மற்றும் சிங்கப்பூருடன் ஒப்பந்தங்களைப் போட இந்தியா முயற்சி செய்கிறது என்றும் விவரமறிந்த வட்டாரத்தின் பெயர் தெரிவிக்க விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெர்மனி மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளுடனும் எதிர்கால ஒப்பந்தங்களுக்கான பேச்சு நடைபெறுகின்றன.
இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து கருத்து கூற மறுத்துவிட்டார்.
சனிக்கிழமையன்று அஸர்பைஜானில் நடந்த ‘COP29’ பேச்சுவார்த்தையில் பிரதிநிதிகள் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு சந்தைக்கு வழிகாட்டும் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
ஜப்பான் நீண்டகாலமாக இந்தியாவுடன் இருதரப்பு கரிம ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்தி வருகிறது என்று இந்திய வர்த்தக அமைச்சு கூறியது. ஆனால் எப்போது ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்பதை அது தெரிவிக்கவில்லை.
ஆனால் இரு நாடுகளும் அப்படியொரு ஒப்பந்தத்தை இறுதி செய்ய 2023ல் இரு நாடுகளும் இணக்கம் கண்டன.