புதுடெல்லி: அமெரிக்க அதிபா் டோனல்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பைச் சிறப்பாக இந்தியா சமாளிக்கும் என ஐடிசி நிறுவனத்தின் தலைவா் சஞ்சீவ் புரி தெரிவித்தாா்.
புதுடெல்லியில் புதன்கிழமை (ஏப்ரல் 16) செய்தியாளா்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், அமெரிக்க அதிபரின் வரி விதிப்பு கொள்கை எதிா்காலத்தில் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இப்போதே கூற முடியாது என்றார் அவர்.
அமெரிக்காவுடன் இந்தியா வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள இருப்பதாகவும் குறுகிய காலத்தில் அதுதொடர்பான பேச்சுவாா்த்தை நல்ல முடிவை எட்டும் என எதிர்பார்ப்பதாகவும் திரு சஞ்சீவ் புரி சொன்னார்.
“இந்தியா நுகா்வைச் சாா்ந்த பொருளியலைக் கொண்டுள்ளது. இதனால், சில குறுகியகால நெருக்கடிகள் ஏற்படலாம்.
“எங்களது ஐடிசி நிறுவனம் பெருமளவில் உள்நாட்டுச் சந்தையைச் சாா்ந்துள்ளது.
“இருப்பினும், அமெரிக்காவின் வரி விதிப்பால் எங்கள் வர்த்தகம்மீது சில தாக்கங்கள் ஏற்படக்கூடும் எனக் கருதுகிறோம்,” என அவர் கூறினார்.