சீன இறக்குமதியால் இழப்புகளைச் சந்திக்கும் இந்திய நிறுவனங்கள்

சீன இறக்குமதியால் இழப்புகளைச் சந்திக்கும் இந்திய நிறுவனங்கள்

2 mins read
c6ea2e1c-b95b-479f-ac20-abdf4caaabe1
சீனா​விலிருந்து மிகக் குறைந்த விலை​யில் மை இறக்குமதி செய்​யப்​பட்டு வருவதால் இந்தியாவில் மை உற்பத்தித் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகச் சீனா​விலிருந்து மிகக் குறைந்த விலை​யில், அதிக அளவில் மை இறக்குமதி செய்​யப்​பட்டு வருகிறது.

இதனால், உள்நாட்டில் மை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பல இழப்புகளைச் சந்தித்து வருகின்றன.

இந்நிலையில், சமூக ஊடகமான ‘ரெட்டிட்’ பக்​கத்​தில் பெயர் குறிப்பிடாத நிறு​வனத்​தின் உயரதி​காரி ஒரு​வர் தகவல் பகிர்ந்​துள்ளார். அந்தப் பதிவு தொழில்​துறை வட்​டாரத்​தில் பெரிய விவாதத்தைக் கிளப்​பி​யுள்​ளது.

அதில் அவர், “கடந்த 34 ஆண்​டு​களாக இயங்கிவரும் எங்​களது நிறு​வனத்​துக்​கு மை தயாரிப்​ப​தற்​கான மூன்று ஆலைகள் உள்​ளன.

“சீன இறக்குமதிகளுடன் ஒப்​பிடு​கை​யில், எங்​களால் போட்டி​யிட முடிவ​தில்​லை. இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக எங்​களது நிறு​வனம் கடும் இழப்பைச் சந்தித்து வரு​கிறது. வேறு வழி​யின்றி இரண்டு ஆலைகளை மூட நிர்​வாகம் முடிவுசெய்​துள்​ளது.

“இந்த கடின​மான முடி​வின் காரண​மாக 1,934 நிரந்​தரப் பணி​யாளர்​கள், 896 ஒப்​பந்​தத் தொழிலா​ளர்​கள் எனக் கிட்டத்தட்ட 2,800க்​கும் மேற்​பட்​டோர் வேலை இழந்​துள்​ளனர்.

“72 பேர் கொண்ட நிறு​வனத்​தின் தகவல் தொழில்​நுட்​பக் குழு எட்டுப் பேராகக் குறைக்​கப்​பட்​டுள்​ளது. பணிநீக்​கம் செய்​யப்​பட்ட ஊழியர்​களுக்கு வழங்​கப்​படும் இழப்​பீட்​டுத் தொகை குறித்​தும் வருத்​தம் உள்​ளது.

“ஊழியர்​களுக்கு 3 முதல் 5 மாத ஊதி​யத்தை இழப்பீடாக வழங்காமல் நிர்​வாகம் மிகக் குறைந்த தொகை​யை மட்​டுமே அங்கீகரித்​துள்​ளது,” என்று விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

நிர்வாகத்​தின் இந்த நடவடிக்​கையால் பெரிதும் அதிருப்தி அடைந்த அந்த அதி​காரி, அந்​நிறு​வனத்​திலிருந்து விலகி ஜெர்​மனிக்​குச் செல்ல முடி​வெடுத்​துள்​ள​தாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்