அரிசி ஏற்றுமதிக்கு 30% வரிவிதிக்க இந்திய அரசு பரிசீலனை

அரிசி ஏற்றுமதிக்கு 30% வரிவிதிக்க இந்திய அரசு பரிசீலனை

கோப்புப் படம்: தினத்தந்தி

24 Nov 2026 - 6:52 pm

1 mins read

புதுடெல்லி: இந்தியாவில் பாசுமதி அல்லாத அரிசியின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உள்நாட்டுச் சந்தையில் அதன் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு 30 விழுக்காடு வரிவிதிப்பது பற்றிப் பரிசீலித்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டுத் தேவையை நிறைவேற்றவும், சாமானிய மக்களுக்கு அரிசி தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்யவும் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்த 30% விழுக்காடு ஏற்றுமதி வரி அடுத்த மாதம் முதல் நடப்பிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அரிசி ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நிர்ணயிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. ஒருவேளை வரி விதிப்புக்குப் பிறகும் உள்நாட்டில் அரிசி விலை குறையாமல் இருந்தால், இறுதிக்கட்ட நடவடிக்கையாக பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு முழுமையான தடைவிதிப்பது குறித்தும் இந்திய அரசு ஆலோசித்து வருகிறது.

முன்னதாக, இதேபோன்ற சூழலில் விதிக்கப்பட்ட ஏற்றுமதித் தடை கிட்டத்தட்ட 14 மாதங்கள் வரை நீடித்தது. ஆனால், இம்முறை அத்தகைய நீண்டகாலத் தடையாக இல்லாமல், சந்தை நிலவரத்திற்கு ஏற்ப குறுகியகால, தற்காலிக நடவடிக்கையாக மட்டுமே இருக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்புச் சொற்கள்