அன்றாடம் ரூ.1,700 கோடி இழப்பு, விலையை ஏற்ற இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை

அன்றாடம் ரூ.1,700 கோடி இழப்பு, விலையை ஏற்ற இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை

2 mins read
aa7fd041-54b1-4a4a-af33-b740740f47ee
இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு ரூ.1,600 கோடி முதல் ரூ.1,700 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: கச்சா எண்​ணெய் விலை உயர்​வால் இந்​திய எண்ணெய் நிறு​வனங்​களுக்கு அன்றாடம் ரூ.1,700 கோடி இழப்பு ஏற்​பட்டு வரு​கிறது.

அதைச் சமாளிக்க விலையை அதிகரிக்குமாறு எண்​ணெய் நிறு​வனங்​கள் அரசாங்கத்துக்குக் கோரிக்கை விடுத்​துள்​ளன.

ஈரான் போரினால், ஹோர்​முஸ் நீரிணை மூடப்​பட்​டதுடன் அந்தப் பகுதியில் செல்லும் சரக்குக் கப்பல்கள்மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் அப்பகுதியை அமெரிக்கப் போர்க் கப்பல்களும் முற்றுகையிட்டுள்ளன.

கச்சா எண்ணெய்ப் போக்குவரத்து எப்போது இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று தெரியாதநிலையில், உலக அளவில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை 50 விழுக்காடுவரை உயர்ந்​துள்​ளது.

இந்​தி​யா​வின் அண்டை நாடுகள், ஐரோப்​பிய நாடு​களில் பெட்​ரோல், டீசல், சமையல் எரி​வாயு விலைகள் உயர்த்​தப்​பட்​டன. ஆனால், இந்தியாவில் அவற்​றின் விலை உயர்த்​தப்​பட​வில்​லை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94.77க்கும் டீசல் ரூ.87.67க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வீட்டு உபயோகச் சமையல் எரிவாயு உருளை விலை கடந்த மார்ச் மாதத்தில் ரூ.60 உயா்த்தப்பட்டது.

மேலும், எண்ணெய் நிறு​வனங்​களுக்கு ஏற்​படும் இழப்பை ஈடு​கட்ட அரசாங்கம் நிதி ஒதுக்​கியது.

எனினும், எரிபொருள் விலையை உயர்த்​தாத​தால், இந்​தி​யன் ஆயில், பாரத் பெட்​ரோலி​யம், இந்​துஸ்​தான் பெட்​ரோலி​யம் ஆகிய நிறு​வனங்​களுக்​கு அன்றாடம் ரூ.1,600 கோடி முதல் ரூ.1,700 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது. கடந்த 10 வாரங்​களில் ஏறத்தாழ ரூ.1 லட்​சம் கோடி இழப்பு ஏற்​பட்​டுள்​ளது.

எண்ணெய் நிறுவனங்கள் கடும் நிதிச் சுமையை எதிர்கொண்டு வருவதால் பெட்ரோல், டீசல் விலையை அதிகரிப்பது தொடர்பாக இந்திய அரசு முடிவெடுக்கலாம் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்