அரியலூர்: பழம்பெரும் பேரரசர் ராஜேந்திர சோழர் பிறந்த நட்சத்திரத்தை அனுசரிக்கும் பூசையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
ஆடி திருவாதிரைத் திருவிழா நேரத்தில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்திலுள்ள பழம்பெரும் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் ராஜேந்திர சோழர் குருபூசைக்குத் திரு மோடி வருகையளித்தார்.
வெள்ளை வேட்டி அணிந்து கழுத்தில் அங்கவஸ்திரத்துடன் காணப்பட்ட திரு மோடியை கோயில் அர்ச்சகர்கள் வரவேற்றனர்.
தமிழகத்திற்கு இரண்டு நாள் வருகை மேற்கொண்டுள்ள திரு மோடி, ஞாயிற்றுக்கிழமை முற்பகுதியில் சாலைக் கண்காட்சி ஒன்றில் பங்குபெற்றார்.
தெற்கிழக்காசியாவுக்கு ராஜேந்திர சோழர் மேற்கொண்ட ஆயிரம் ஆண்டுநிறைவை குறிக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கும் திரு மோடி செல்லவிருக்கிறார்.
நிகழ்ச்சி இடத்திற்கு அருகே பாஜக, அதிமுக கட்சிகளின் பதாகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. நிகழ்ச்சியின்போது பிரதமர் மோடி, முதலாம் ராஜேந்திர சோழனின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சனிக்கிழமை திரு மோடி, தூத்துக்குடியிலுள்ள பல்வேறு தேசிய வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவைச் சிறப்பித்தார்.
கிபி 1014 முதல் 1044 வரை வாழ்ந்ததாகக் கூறப்படும் ராஜேந்திர சோழப் பேரரசர், இந்திய வரலாற்றில் மிக ஆற்றல்வாய்ந்த, தொலைநோக்கு கொண்டுள்ள தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
ராஜேந்திர சோழனின் தலைமையில் சோழப் பேரரசின் செல்வாக்கு, தென்கிழக்காசியா வரை நீண்டது.
கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாக அவர் நிறுவினார்.
திருவாதிரை நட்சத்திரத்தில் அவர் பிறந்ததாக முற்காலத்திலிருந்து நம்பப்படுகிறது. .