மும்பை: புதன்கிழமை (டிசம்பர் 18) பிற்பகலில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு காசு குறைந்து 84.92 ரூபாயாக இருந்தது என்று பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட் (Business Standard) உள்ளிட்ட ஊடகங்கள் தெரிவித்தன.
புதன்கிழமையன்று அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆக மோசமான நிலையை எட்டும் விளிம்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. வட்டி விகிதம் தொடர்பில் அமெரிக்க மத்திய வங்கி எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்ற அறிகுறிகளுக்காகக் காத்திருக்கும் வேளையில் இந்நிலை உருவாகியுள்ளது.
உலகளவிலும் உள்ளூரிலும் காணப்படும் அம்சங்களால் இந்திய ரூபாய் நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.