மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு முன்னில்லாத அளவு சரிந்தது.
இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு பைசா குறைந்து ஒரு அமெரிக்க டாலருக்கு 84.38 இந்திய ரூபாய் என்று பதிவாகியுள்ளது.
வெளிநாட்டு முதலீட்டு நிதி வெளியேற்றம் தொடர்வதும் உள்நாட்டுப் பங்குப் பரிவர்த்தனைகளில் ஏற்பட்டுள்ள முடக்கநிலையும் இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரூபாய் தொடர்ந்து நெருக்குதலுக்கு உள்ளாகும் சாத்தியம் அதிகம் இருப்பதாக ஃபாரேக்ஸ் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க டாலர் குறியீடு குறைந்தால் அல்லது வெளிநாட்டு முதலீட்டு நிதி வெளியேற்றம் மெதுவடைந்தால் மட்டுமே இந்நிலை மாறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
நவம்பர் 8ஆம் தேதியன்று இந்திய ரூபாயின் மதிப்பு ஐந்து பைசா குறைந்து 84.37ஆகப் பதிவானது.