தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க வர்த்தக வரிவிதிப்பால் இந்திய பங்குச் சந்தை பாதிப்பு

1 mins read
fb697d1b-49e0-42d6-b8d3-70bc4f9223ee
மும்பையிலுள்ள பங்குச்சந்தைப் பரிவர்த்தையிலுள்ள தொலைக்காட்சித் திரையைக் கண்டு தலையில் கைவைக்கும் ஆடவர். - படம்: ராய்ட்டர்ஸ்

பல்வேறு நாடுகளிலிருந்து வரும் இறக்குமதிகள் மீது அமெரிக்கா, வர்த்தக வரிகளை உயர்த்தியதை அடுத்து இந்தியாவின் பங்குச் சந்தைகள் குறைந்தன.

இந்தியாவின்மீது புதன்கிழமையன்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப, 26 விழுக்காடு வரி விதித்ததை அடுத்து இந்தியாவின் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டன.

ராய்ட்டர்ஸ் தகவல்படி, அமெரிக்கா விதித்துள்ள வரிகள் இந்திய நிதிச்சந்தைகளை பாதித்திருப்பதாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

எனினும், மற்ற ஆசிய நாடுகளைக் காட்டிலும் இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள வரியின் விகிதம் குறைவாக இருப்பது இந்தியாவுக்குச் சாதகமானது. அத்துடன், மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கான வரி விதிவிலக்கு, இந்தப் பாதிப்பை ஓரளவு குறைத்துள்ளது.

வியாழக்கிழமை நிதிச்சந்தைகள் காலையில் திறந்தபோது, ‘நிஃப்டி 50’ குறியீடு 0.2 விழுக்காடு குறைந்து 23,285,6 புள்ளிகளாகப் பதிவானது. அத்துடன், ‘பிஎஸ்இ சென்செக்ஸ்’ குறியீடு, 0.27 விழுக்காடு குறைந்து 76,410.8 புள்ளிகளாகப் பதிவானது.

அமெரிக்காவுடன் வர்த்தகப் பங்காளித்துவத்தில் இணைந்துள்ள எல்லா நாடுகளின்மீது திரு டோனல்ட் டிரம்ப், 10 விழுக்காடு வரியை விதித்திருக்கிறார். அந்த வரிகள், ஏப்ரல் 5ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும்.

சில நாடுகளின்மீது திரு டிரம்ப் கூடுதலாக விதித்துள்ள வரிகள், ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கும்.

குறிப்புச் சொற்கள்