உலகின் மிக நீண்ட கூந்தலைக் கொண்ட இந்தியப் பெண்மணி

உலகின் மிக நீண்ட கூந்தலைக் கொண்ட இந்தியப் பெண்மணி

1 mins read
15a8ec9e-6196-4067-bdfd-ec0f7e841266
ரேணு. - படம்: மாலை மலர்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேணு தரியல்‌‌ என்ற பெண்மணி உலகிலேயே மிக நீண்ட கூந்தலைக் கொண்டவர்களில் ஒருவர் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.

‘யூடியூப்’ காணொளிகளில் பிரபலமான அவரது கூந்தலின் நீளம் 8 அடி, 10 அங்குலம் ஆகும். கடந்த ஏப்ரல் மாதம் ரேணுவின் கூந்தல் நீளம் அளவிடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது.

இதற்கு முன்பு உக்ரேனைச் சேர்ந்த அலியா என்பவர் 8 அடி, 5.3 அங்குலம் நீளம் கொண்ட கூந்தலை வளர்த்து முதலிடத்தில் இருந்தார். அவரது சாதனை ரேணுவால் முறியடிக்கப்பட்டது.

கடந்த 2015 முதல் கூந்தல் வளர்ப்பில் கவனம் செலுத்தி வருகிறார் ரேணு.

இந்திய கலாசாரத்தில் நீண்ட கூந்தல் என்பது பாரம்பரியத்தின் அடையாளமாகவும் அழகின் அம்சமாகவும் கருதப்படுகிறது என்றும் இவைதான் தனது கூந்தலை நீளமாக வளர்க்க ஊக்கம் அளித்தன என்றும் ரேணு தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்