தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய இளையர்: உடலை மீட்கப் போராடும் பெற்றோர்

1 mins read
46bb71b1-29c3-49b1-9bd7-9dec98a8295f
சுட்டுக்கொல்லப்பட்ட  முகமது நிஜாமுதீன். - படம்: ஊடகம்

ஹைதராபாத்: தெலுங்கானாவைச் சேர்ந்த 30 வயதான முகமது நிஜாமுதீன் என்ற இளையர் அமெரிக்காவின் கலிஃபோர்னியா பகுதியில் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார். மகனின் உடலைத் தாய்நாட்டுக்குக் கொண்டுவர அவரது பெற்றோர் இந்திய அரசின் உதவியை நாடியுள்ளனர்.

தொழில்நுட்ப வல்லுநரான முகமது நிஜாமுதீன், உயர்கல்விக்காக கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்தார்.

இந்நிலையில், தன் அறைத்தோழனுடன் ஏற்பட்ட சண்டையின்போது கலிஃபோர்னியா காவல்துறையினர் சுட்டுக்கொன்றதாகக் கூறப்படுகிறது.

தனது மகனுக்கும் அறைத்தோழனுக்கும் இடையே ஏற்பட்ட சிறு கைகலப்பையடுத்து, அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக முகமது நிஜாமுதீனின் பெற்றோர் கூறியுள்ளனர்.

அமெரிக்க நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்த முகமது நிஜாமுதீன், பதவி உயர்வு பெற்ற பிறகு கலிஃபோர்னியாவுக்குக் குடிபெயர்ந்ததாகத் தெரிகிறது.

தனது மகனின் உடலை வீட்டிற்குக் கொண்டுவர மத்திய அரசு உதவ வேண்டும் என முகமது நிஜாமுதீனின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

தன் மகனைச் சுட்டுக் கொன்றதற்கான காரணங்கள் என்னவென்று தமக்குத் தெரியவில்லை என்றும் சான்டா கிளாரா என்ற பகுதியில் உள்ள ஏதோ ஒரு மருத்துவமனையில் தனது மகனின் உடல் வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்