தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மேலும் 30 ஏர்பஸ் விமானங்களை வாங்கும் இண்டிகோ

1 mins read
6d1daec4-afa4-4a4b-9f62-37896c4ebdf7
இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி பியெட்டர்ஸ் எல்பர்ஸ். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: மலிவுக் கட்டண விமானச் சேவை வழங்கும் நிறுவனமான இண்டிகோ கூடுதலாக 30 ஏர்பஸ் A350 வகை விமானங்களை வாங்கவிருக்கிறது.

இண்டிகோ ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) இத்தகவலை உறுதிப்படுத்தியதாக இந்துஸ்தான் டைஸ் ஊடகம் தெரிவித்தது. இந்த ஒப்பந்ததைத் தொடர்ந்து இண்டிகோவிடம் இருக்கும் A350 வகை விமானங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது.

மேலும் 40 A350 வகை விமானங்களை வாங்க வகைசெய்யும் ஒப்பந்தமும் இப்பரிவர்த்தனையில் இடம்பெற்றுள்ளது.

“ஏர்பஸ் நிறுவனத்துடன் 30 A350 வகை விமானங்களை வாங்குவதற்கான இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளோம். 2027ஆம் ஆண்டு முதல் புதிய விமானங்கள் எங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்,” என்று இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி பியெட்டர் எல்பர்ஸ் தெரிவித்தார். ஆண்டுதோறும் நடந்துவரும் அனைத்துலக ஆகாயப் போக்குவரத்துச் சங்க நிர்வாகக் குழுச் சந்திப்பில் அவர் பேசினார்.

சென்ற ஆண்டு வாங்கிய A350 வகை விமானங்கள் 2027 முதல் 2030களின் தொடக்க ஆண்டுகளுக்குள் அனுப்பி வைக்கப்படும் என்று திரு எல்பர்ஸ் கூறினார்.

இண்டிகோ, அண்மைக் காலமாக நீண்டநேர அனைத்துலகப் பயணிகள் விமானச் சேவையை வழங்கத் தொடங்கிவிட்டது. அதற்கு வகைசெய்யும் வாடகை ஒப்பந்தம் அந்நிறுவனத்துக்கும் துருக்கிய ஏர்லைன்ஸ் நிறுனத்துக்கும் இடையே நடப்பில் உள்ளது. அதன்படி போயிங் 777 வகை விமானங்களில் இண்டிகோ பயணச் சேவைகளை வழங்கிவருகிறது.

அந்த ஒப்பந்தம் அடுத்த மூன்று மாதங்களில் நிறைவடையும்.

நோர்ஸ் அட்லான்டிக் ஏர்வேஸ் நிறுவனத்துடனான வாடகை ஒப்பந்தத்தின்கீழ் இண்டிகோ, போயிங் 787 விமானங்களில் சேவைகளை வழங்கும்.

குறிப்புச் சொற்கள்