விமானத்தில் பீடி புகைத்த பயணி கைது

விமானத்தில் பீடி புகைத்த பயணி கைது

1 mins read
16774dd0-c5e3-4ef0-bc7b-5f95152db2a4
மாதிரிப்படம்: - பிக்சாபே

மும்பை: விமானப் பயணத்தின்போது பீடி புகைத்த பயணியை மும்பை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

புதுடெல்லியிலிருந்து செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 5) மும்பை சென்ற இண்டிகோ விமானத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

விமானத்தில் பீடி புகைக்கும் நெடி வந்ததையடுத்து, ஊழியர்கள் சோதனையில் இறங்கினர். அப்போது, கழிவறையிலிருந்தே அந்நெடி வந்ததை அவர்கள் கண்டறிந்தனர்.

கழிவறையிலிருந்து வெளியே வந்த அப்பயணியிடம் விசாரித்ததில், பீடி புகைத்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

விமானம் மும்பையில் தரையிறங்கியபின் காவல்துறையிடம் அப்பயணி ஒப்படைக்கப்பட்டார். அவர்மீது வழக்கு பதிந்த காவல்துறை, இப்போது அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்