புதுடெல்லி: கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் குழுவின் தொண்டு நிறுவனமான ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்தும் வனவிலங்கு மீட்புப் பூங்கா குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும் சட்டவிரோத விலங்கு கையகப்படுத்துதல் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் அளிக்கப்படவில்லை என்று அது கூறியது.
வன்தாரா என்பது மேற்கு குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள அம்பானி குடும்பத்தின் ஒரு தனித்துவமான திட்டம். இது, கோடீஸ்வரரின் மகன் திரு அனந்த் அம்பானியின் தலைமையில் செயல்படுகிறது.
அதன் வலைத்தளம் ஆயிரக்கணக்கான விலங்குகளை மீட்டு சிகிச்சை அளித்துள்ளதாகவும், யானைகளுக்கு மிகப்பெரிய மருத்துவமனை கட்டியுள்ளதாகவும் கூறுகிறது.
2024ஆம் ஆண்டில் திரு அனந்தின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் இடம்பெற்ற இடங்களில் இதுவும் ஒன்றாகும். அங்கு உலகளாவிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி பிற்பகுதியில், வன்தாராவில் விலங்குகளைத் தவறாக கையாண்டனர் என்றும் அவை எவ்வாறு அங்கு கொண்டு செல்லப்பட்டன என்றும் மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் அதன் கடமைகளில் தவறிவிட்டது என்றும் குற்றம் சாட்டி லாப நோக்கற்ற மற்றும் வனவிலங்கு குழுக்களின் புகார்களைக் குறிப்பிட்டு பொது நல வழக்குகள்மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
எழுத்துபூர்வ உத்தரவில், புகார்கள்மீது அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்யத் தயாராக இல்லை என்று மனுதாரர்கள் சொல்வதால் விசாரணை தேவை என்று நீதிமன்றம் கூறியது.
இதற்கிடையே ஓர் அறிக்கையில், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக வன்தாராவின் செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸிடம் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
வன்தாராவின் நோக்கம் விலங்குகளை மீட்டு, மறுவாழ்வு மற்றும் பராமரிப்பு வழங்குவது என்றும் அவர் கூறினார்.