புதுடெல்லி: பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டிய சர்ச்சைக்குரிய மேற்குவங்க மாநில எம்பியிடம் விசாரணை நடத்த மத்திய உளவுத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹுமாயுன் கபீர் என்ற முன்னாள் திரிணாமூல் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரான அவர், பரக்பூர் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6ஆம் தேதி மேற்குவங்கத்தில் புதிய மசூதி கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டப்படும் என்று ஹுமாயுன் கபூர் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஹுமாயுன் கபீர் வகுப்புவாதத்தைத் தூண்டுவதாக பாஜக சாடியது. மேற்குவங்க ஆளுநர் ஆனந்தபோஷ் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் எனத் தன் பங்குக்கு எச்சரித்திருந்தார்.
இத்தகைய பரபரப்புகளுக்கு இடையே, ஹூமாயுன் கபீரை திரிணாமூல் கட்சியில் இருந்து நீக்கினார் முதல்வர் மம்தா பானர்ஜி. எனினும் பாபர் மசூதி அடிக்கல் நாட்டு விழா திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஹுமாயுன் கபீர் தரப்பு அறிவித்தது.
எம்எல்ஏ பதவியைத் துறந்துவிட்டு, தாம் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க இருப்பதாகவும் கபீர் தெரிவித்து இருந்தார். இதையடுத்து, மசூதி கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
இதைத் தடுத்து நிறுத்தக்கோரி கோல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதை விசாரித்த நீதிமன்றம் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து மாநில காவல்துறை அவரிடம் விசாரணை நடத்த உள்ளது.


