தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அயோத்தி ராமர் கோயிலுக்கு அனைத்துலக விருது

1 mins read
c9c4dc31-3737-42a8-ab71-cf354190b894
அயோத்தி ராமர் கோயில். - படம்: இணையம்

அயோத்தி: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரில் அமைந்துள்ள ராமர் கோயிலுக்குப் பாதுகாப்பு நிர்வாகம் தொடர்பில் அனைத்துலக விருது வழங்கி கெளரவிக்கப்பட்டு உள்ளது.

அயோத்தி ராமர் கோயிலுக்குப் புகழ்பெற்ற ‘கௌரவ வாள்’ (Sword of Honour) விருது வழங்கப்பட்டிருப்பதை அதன் கட்டுமானக் குழுவின் தலைவர் நிரிப்பேந்திர மிஸ்ரா உறுதிப்படுத்தினார் என்று நியூஸ்18 உள்ளிட்ட ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமையன்று (டிசம்பர் 15) தெரிவித்தன.

பிரிட்டனின் பாதுகாப்பு மன்றம் அதற்கான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்பாகும்.

அதன்படி ஐந்து நட்சத்திரங்கள் பெற்று சிறப்புத் தேர்ச்சி பெறும் திட்டங்களுக்குத்தான் ‘கௌரவ வாள்’ விருது வழங்கப்படும் என்று ராமர் கோயில் கட்டுமானக் குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்