தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்ரேல்-ஈரான் போர்: இந்திய பாஸ்மதி அரிசி ஏற்றுமதி பாதிப்பு

1 mins read
2ebd5f64-43fe-4e0a-824c-2b27666770b0
இஸ்ரேல்-ஈரான் பூசல், இந்தியாவிலேயே ஆக அதிகமாக பாஸ்மதி அரிசியைத் தயாரிக்கும் பஞ்சாப் மாநிலத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது. - படம்: இணையம்

சண்டிகர்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் 26 விழுக்காட்டு வரிவிதிப்பால் ஏற்கெனவே தவித்துவரும் இந்திய பாஸ்மதி அரிசி சந்தைக்கு இஸ்ரேல்-ஈரான் போர் மேலும் நெருக்குதல் அளித்துள்ளது.

கட்டணம் வசூலிப்பதில் தாமதம், அரிசி விலை சரிவு, உள்நாட்டில் தேக்கம் போன்ற பல பிரச்சினைகளை இந்திய பாஸ்மதி அரிசி ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்கின்றனர்.

சவூதி அரேபியாவை அடுத்து இந்திய பாஸ்மதி அரிசியின் இரண்டாவது பெரிய இறக்குமதியாளராக ஈரான் விளங்குகிறது. குறிப்பாக, ஈரானிய சமையலறைகளில் புழுங்கல் அரிசிக்கு அதிக தேவை நிலவுகிறது.

2023/24 நிதியாண்டில் மொத்தம் 59.42 லட்சம் மெட்ரிக் டன் பாஸ்மதி அரிசி இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த ஏற்றுமதிகளில் பெரும்பாலானவை ஈரான், சவூதி அரேபியா, ஈராக், ஏமன், அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. எஞ்சியவை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

இஸ்ரேல்-ஈரான் பூசல், இந்தியாவிலேயே ஆக அதிகமாக பாஸ்மதி அரிசியைத் தயாரிக்கும் பஞ்சாப் மாநிலத்தை (மொத்த உற்பத்தியில் 40% பங்கு) கடுமையாகப் பாதித்துள்ளது. ஹரியானாவும் பிற மாநிலங்களும் அடுத்தடுத்த நிலைகளில் வருகின்றன.

இஸ்ரேல்-ஈரான் போர் மூண்டதைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து பாஸ்மதி அரிசி ஏற்றுமதிகள் முற்றிலுமாக நின்றுவிட்டதாக பாஸ்மதி அரிசி ஆலைத் தொழிலாளர், ஏற்றுமதியாளர் சங்கத்தின் துணைத் தலைவரான ரஞ்சித் சிங் ஜோசன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்