மணாலி: இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள மணாலி நகருக்குச் சுற்றுலா வந்த இஸ்ரேலியப் பயணிகள், ‘ஃப்ளை துபாய்’ விமானி ஸ்மித் மச்சாருக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
‘கேப்டன் ஸ்மித், இஸ்ரேலியர்கள் நிறைந்த விமானத்தைக் காப்பாற்றிய ‘உண்மையான கதாநாயகன்’, ‘இஸ்ரேல் மக்கள் இந்தியாவை நேசிக்கிறார்கள், உங்களுடன் உறுதுணையாக நிற்கிறார்கள்’ என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மணாலி வீதிகளில் அவர்கள் வலம்வந்தனர்.
ஏ.ஆர். ரஹ்மானின் ‘வந்தே மாதரம்’ பாடல் பின்னணியில் ஒலிக்க, உள்ளூர் மக்களுடனும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளுடனும் அன்பைப் பகிர்ந்துகொண்டு இனிப்புகளை வழங்கி தங்களின் நன்றியை வெளிப்படுத்தினர்.
இந்த உணர்ச்சிபூர்வமான காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
தாக்குதலில் காயமடைந்து சவுதி அரேபியாவில் அவசர சிகிச்சை பெற்ற விமானி ஸ்மித் மச்சார், மேல் சிகிச்சைக்காக அபுதாபிக்கு மாற்றப்பட்டு தற்போது நலமாக இருப்பதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
