தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஷ்மீர் தாக்குதல்: சுற்றுலா சென்ற தமிழர்கள் பத்திரமாக மீட்பு

1 mins read
2667afd9-03b8-42b6-8ffc-9f0b6f554b86
தமிழகத்தில் இருந்து 70 பேர் கொண்டுள்ள குழு, சுற்றுலா நிமித்தம் காஷ்மீர் சென்றிருந்தது. - படம்: ஏஎன்ஐ

சென்னை: காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்துள்ள நிலையில், முன்பே அங்கு சென்றிருந்த தமிழகச் சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக ஊர் திரும்பியுள்ளனர்.

நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் விமானம் மூலம் சென்னை திரும்பியதாகவும் இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் இருந்து 70 பேர் கொண்டுள்ள குழு, சுற்றுலா நிமித்தம் அங்கு சென்றிருந்தது.

இரண்டு நாள்களுக்குப் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்த அக்குழுவினர், சம்பவத்தன்று துப்பாக்கிச்சூடு நடந்த இடத்துக்கு அருகில் இருந்துள்ளனர். சென்னை திரும்பிய தமிழர்கள் தங்களுடைய அனுபவத்தை செய்தியாளர்களிடம் பகிர்ந்தனர்.

“சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் திடீரென எங்களிடம் பதற்றமாகப் பேசினார். ‘அங்கே செல்ல வேண்டாம்’ என்றார். துப்பாக்கிச் சூடு குறித்து கேள்விப்பட்டதும் பதற்றமாகிவிட்டோம். ஒருவருக்கு நெஞ்சு வலி வந்துவிட்டது. அவர், உள்ளூர்வாசிகள் உதவியுடன், ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

“டெல்லி தமிழ்நாடு இல்லத்தை தொடர்பு கொண்டோம். அவர்கள் எங்களை பத்திரமாக பார்த்துக் கொண்டனர். எப்படியோ நல்லபடியாக ஊர் திரும்பிவிட்டோம்,” என்று உயிர் தப்பி வந்தவர்கள் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டனர்.

ஒரு மணி நேரத்திற்கு முன் சென்றிருந்தால், தங்களுடைய நிலையும் கவலைக்கிடமாகி இருக்கும் என்றும் இந்திய ராணுவத்தினரின் உதவியை வாழ்நாளில் மறக்க முடியாது என்றும் அவர்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

“ராணுவம் என்றால் இப்படித்தான் இருக்குமா என்பதைப் பார்த்ததும் புல்லரித்துவிட்டது. சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை,” என்று மதுரையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி ராமமூர்த்தி கூறினார்.

குறிப்புச் சொற்கள்