இந்தியாவில் முதல் மாநிலமாக முதியோரைப் பாதுகாக்க சட்டம் நிறைவேற்றிய கேரள அரசு

இந்தியாவில் முதல் மாநிலமாக முதியோரைப் பாதுகாக்க சட்டம் நிறைவேற்றிய கேரள அரசு

சித்திரிப்புப் படம்: லைவ் லா

27 Oct 2026 - 6:21 pm

1 mins read

திருவனந்தபுரம்: கேரளச் சட்டமன்றத்தில் மூத்த குடிமக்கள் (பராமரிப்பு, உரிமைகள் பாதுகாப்பு) மசோதா, 2026 ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் இந்தியாவில் முதியோரின் உரிமைகளைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் விரிவான சட்டத்தைக் கொண்டுவந்த முதல் மாநிலம் என்ற பெருமையைக் கேரளா பெற்றுள்ளது.

கடந்த அக்டோபர் 13ஆம் தேதி அம்மாநிலச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்த முக்கியமான சில திருத்தங்களை முதல்வர் வி.டி. சதீசன் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து ஒருமனதாக நிறைவேறியது.

முதியோரைத் துன்புறுத்துவது, சுரண்டுவது, அவர்களின் சொத்துகளைச் சட்டவிரோதமாகக் கைப்பற்றுவது போன்ற குற்றங்களுக்குக் கடுமையான சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப் புதிய மசோதா வகைசெய்கிறது.

பதிவு செய்யப்படாத முதியோர் பராமரிப்பு மையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அனைத்துப் பராமரிப்பு இல்லங்களையும் முறைப்படுத்தச் சட்டக் கட்டமைப்பு உருவாக்கப்படும்.

முதியோருக்கான சுகாதாரச் சேவைகள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் எளிதில் கிடைப்பதைப் புதுச் சட்டம் உறுதி செய்கிறது.

மாநில ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றவுடன், இம்மசோதா அதிகாரபூர்வமாக நடைமுறைச் சட்டமாக மாறும்.

குறிப்புச் சொற்கள்