இந்தியாவில் இரண்டாம் ஆலை மூலம் $2 பில்லியன் முதலீடு செய்யவுள்ள கியா

இந்தியாவில் இரண்டாம் ஆலை மூலம் $2 பில்லியன் முதலீடு செய்யவுள்ள கியா

படம்: ஓட்டோமோட்டிவ் நியூஸ்

12 Nov 2026 - 6:35 pm

1 mins read

புதுடெல்லி: தென்கொரியாவின் கியா நிறுவனமும் அதற்குப் பொருள்களை விநியோகிக்கும் நிறுவனங்களும் இந்தியாவில் இரண்டாம் உற்பத்தி ஆலையை அமைக்க கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் வெள்ளியை முதலீடு செய்ய உள்ளன.

ஆந்திரப் பிரதேசத்தில் அமையவிருக்கும் ஆலைக்கான பணிகளை 2030ல் தொடக்கத்தில் ஆரம்பிக்க உத்தேசித்திருப்பதாக ஆந்திர மாநில அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகுவாகனத் தயாரிப்பு நிறுவனமான கியா தெரிவித்தது.

இந்த முதலீட்டின் மூலம் மொத்தம் 12,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“கியாவின் நீண்டகால இலக்குகளுக்கு இந்தியா முக்கியப் பகுதியாக விளங்குகிறது,” என்று கியா இந்தியாவின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான குவாங்கு லீ கூறியுள்ளார்.

இந்த விரிவாக்கத்தின் வாயிலாக புதிய வாகன வடிவங்களை அறிமுகப்படுத்துவதோடு உள்ளூர், வெளிநாட்டுச் சந்தைகளுக்குச் சேவையாற்ற முடியும் என்றும் அவர் விவரித்தார்.

உலக அளவில் வாகன உற்பத்தி நிறுவனங்கள், உலகின் மூன்றாவது ஆகப்பெரிய கார் சந்தையான இந்தியாவில் தங்களின் முதலீடுகளை அதிகரித்துவருகின்றன. அந்நாட்டில் அதிகரித்துவரும் தேவையையும் உள்ளூர் உற்பத்தி ஆற்றலையும் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள அவை அவ்வாறு செய்துவருகின்றன.

ஜப்பானின் டொயோட்டா, ஹோண்டா போன்ற பிரபல வாகன நிறுவனங்களும் இந்தியாவில் தங்களின் உற்பத்தி வசதிகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துவருகின்றன.

குறிப்புச் சொற்கள்