ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் ஐயாயிரம் பேர் கலந்துகொண்ட குச்சிப்புடி நடன நிகழ்ச்சி கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தது.
ஜிஎம்சி பாலயோகி திடலில் சனிக்கிழமை (டிசம்பர் 27) பாரத் ஆர்ட்ஸ் அகாடமி மற்றும் மாநில அரசு இணைந்து இச்சாதனை நிகழ்த்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபுச் சிற்றரசு மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தும், மும்பை, ராய்ப்பூர், பெங்களூரு மற்றும் சென்னை போன்ற இந்திய நகரங்களிலிருந்தும் நடனக் கலைஞர்கள் வந்திருந்தனர். இதற்காக மாணவர்கள் இரண்டு மாதப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 24ஆம் தேதி, இதேபோன்று ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 4,000 பேர் கலந்துகொண்டு சாதனை படைத்தனர்.
இப்போது, இரண்டாவது முறையாக சாதனை படைத்துள்ளது. நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் வகிட்டி ஸ்ரீஹரி கலந்துகொண்டார்.
நடன நிகழ்ச்சியின் முதன்மை அமைப்பாளரான லலிதா ராவ் கூறுகையில், 12 ஆண்டுகள் பழைமையான அகாடமியில் கிளாசிக்கல், மேற்கத்திய மற்றும் நாட்டுப்புற நடனங்கள், இசை மற்றும் இசைக்கருவிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

