புதுடெல்லி: தேர்தல் ஆணையத்துக்கு எதிராகப் போராடி வரும் கரப்பான் பூச்சிக் கட்சிக்குப் (சிஜேபி) எதிராக டெல்லியில் ‘லால் ஹிட்’ என்ற புதிய அமைப்பு உருவாகியுள்ளது.
நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராகக் கரப்பான் பூச்சிக் கட்சி கடந்த ஜூலை மாதம் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து இந்தியக் கல்வி அமைச்சர் பொறுப்பில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகினார்.
தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆர்) எதிராகவும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவிவிலகக் கோரியும் சிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
அரசியலமைப்பை எதிர்ப்பவர்களுக்கும் ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்த முயற்சி செய்பவர்களுக்கு எதிராகவும் களமிறங்கியுள்ளதாக சமூக, அரசியல் செயற்பாட்டாளரான ‘லால் ஹிட்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அயன் பட்நாகர் தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜன்பத் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் போட்டியிட புதிய அமைப்பைத் தொடங்கவில்லை என்றும் நாட்டின் அமைதியைக் குலைக்கும் கரப்பான் பூச்சிக் கட்சியின் போராட்டங்களை எதிர்ப்பதே முதன்மை நோக்கம் என்றும் கூறினார்.
வீடுகளில் உள்ள கரப்பான் பூச்சிகளை அழிக்க ‘சிவப்பு ஹிட்’ (லால் ஹிட்) என்ற பூச்சி மருந்து பயன்படுவதுபோல், சமூகத்துக்குப் பயன்படும் தங்கள் அமைப்புக்கு பெயரிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
