மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை (04.05.2025) இரவு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தின்போது பலத்த காற்றுடன் பெய்த மழையில் மின்விளக்குக் கம்பம் (போக்கஸ் லைட்) மேடையில் சாய்ந்தது. அப்போது பேசிக் கொண்டிருந்த திமுக மக்களவை உறுப்பினா் ஆ. ராசா நூலிழையில் உயிர் தப்பினாா்.
ஆ. ராசா சுதாரித்து வேகமாக நகா்ந்ததால், காயமின்றி தப்பினாா். அத்துடன் பேச்சை நிறுத்திய ராசா அங்கிருந்து புறப்பட்டு சென்றாா். அதைத்தொடா்ந்து மழையால் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

